பிரிந்தது ‘பீப் சாங்’ கூட்டணி! : வளருது ‘டேவிட் புள்ள’ கூட்டணி!!

Get real time updates directly on you device, subscribe now.

simbu

‘பீப் சாங்’ சர்ச்சையில் சிம்புவுக்கு இருந்த மிச்சமிருந்த நல்ல பெயரும் நஞ்சுபோல கெட்டுப்போனது தான் மிச்சம்.

இன்றுவரை வெளியில் தலைகாட்ட முடியாமல் ட்விட்டரில் மட்டும் ஆக்டீவ்வாக இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சிம்பு – அனிருத் இருவருடைய பெயர்களும் அடிபட்டது. ஆனால் ”நான் அந்தப் பாடலுக்கு இசையமைக்கவில்லை” என்று சொன்னதோடு கோவை போலீசில் ஒருநாள் நள்ளிரவில் ஆஜராகி விளக்கமும் கொடுத்து கிரேட் எஸ்கேப் ஆகி விட்டார் அனிருத்.

இதனால் இந்த விஷயத்தில் கடைசிவரை கூட இருந்து உதவி செய்வார் என்று எதிர்பார்த்த சிம்புவுக்கு பேரதிர்ச்சி!

Related Posts
1 of 40

அதனாலோ என்னவோ இப்போது தனது கூட்டணியை மாற்றியிருக்கிறார் சிம்பு.

தொடர்ந்து தனது புதுப் படங்களில் அனிருத்துடன் இணைய திட்டமிட்டிருந்த சிம்பு ‘பீப் சாங்’ விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பிடிக்காததால் தன்னுடைய புதுப்படத்தில் அனிருத்துக்குப் பதில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ரெகமெண்ட் செய்திருக்கிறார்.

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் இந்தப் படத்துக்கு ஜி.பி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர்

மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.