ஹிட் செண்டிமெண்ட் : ஹன்ஷிகாவை ‘டிக்’ செய்த உதயநிதி

Get real time updates directly on you device, subscribe now.

udhayanithi

ங்கிலாந்து இளவரசியாகவே இருந்தாலும் காம்பினேஷன் ஹிட்டாகவில்லை என்றால் அப்புறம் அந்த நடிகையை எந்த ஹீரோவும் திரும்பி பார்க்க மாட்டார்கள்.

அதே இங்கிலாந்திலிருந்து வந்த வெள்ளைத் தோல்காரரான எமி ஜாக்சனுடன் ‘கெத்து’ படத்தில் இணைந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அவர் நடித்த மற்ற படங்களை விட சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்தை தான் கிழித்து தொங்கபோட்டனர்.

இதனால் கடுப்பான உதயநிதி பெய்டு ரீவீவர்ஸ் என்று கூட பதிலடி கொடுத்தார்.

இருந்தாலும் சினிமாவில் செண்டிமெண்ட் முக்கியம் இல்லையா? அதற்காகனே ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட் படத்தில் தன்னோட ஜோடி சேர்ந்த ஹன்ஷிகாவை தனது மனிதன் படத்தில் டிக் செய்திருக்கிறார் உதயநிதி.

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஐ.அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படம் தான் இந்த “மனிதன்”.

Related Posts
1 of 9

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக கை கோர்த்திருக்கிறார், ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் கலை இயக்குநர் செல்வகுமார் மற்றும் எடிட்டிங் மணிகண்ட பாலாஜி.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது மனிதன் திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தெருவும், அதில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் கையால்வது பெரும் சவாலாக இருந்தது.

இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது என்று இயக்குநர் அஹமத் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படபிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.