ஏதோ முக்கியமான கேரக்டராம்… : சிபிராஜ் படத்தில் கமிட்டானார் வரலட்சுமி

Get real time updates directly on you device, subscribe now.

varalakshmi

களைத்துப் போகிற அளவுக்கு பாலாவின் ”தார தப்பட்டை” படத்தில் நடித்துக் காட்டியும் தமிழில் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வராததில் வரலட்சுமிக்கு கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் தான்.

இருந்தாலும் அந்தப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து பிரமித்தே மலையாளத்தில் நடிக்கக் கூப்பிட்டார்கள்.

Related Posts
1 of 9

அதோடு இப்போது தமிழிலும் இரண்டாம் மட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேருகிற வாய்ப்பு வரலட்சுமியை தேடி வர ஆரம்பித்திருக்கிறது.

வருகிற வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று யோசித்தவர் சிபிராஜ் ஜோடியாக இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதுப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

விஜய் ஆண்டனியை வைத்து ”சைத்தான்” படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ரம்யா நம்பீசன் ஒரு நாயகியாக நடிக்கும் இப்படத்தில் தான் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமாம்.