செம கலாய், செம கலாய் : லட்சுமி ராமகிருஷ்ணன் டென்ஷன் ; கண்டுக்காத ஆர்.ஜே பாலாஜி!

1000 எபிசோடை தாண்டிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அடுத்தடுத்த திரைப்படங்களில் புதிய எபிசோட் போட்டு கலாய்ப்பது வழக்கமாகி விட்டது. ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று அந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய டயலாக்கையே பாடலாக்கி கலாய்த்தார்கள்.
அதேபோல சென்ற வெள்ளியன்று ரிலீசான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் சுமார் 20 நிமிடங்களை அந்த நிகழ்ச்சியை எவ்வளவு டேமேஜ் செய்து கலாய்க்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு கலாய்த்திருக்கிறார்கள். சும்மாவே ஆடுவார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்திலோ கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கலாய்த்ததில் ரொம்பவே டென்ஷனாகி விட்டார் அவர். படத்தில் அந்த நிகழ்ச்சியை ரொம்பவே கலாய்த்த ஆர்.ஜே பாலாஜூக்கு காட்டமாக பதில் கொடுத்தார்.
”ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளவர்கள் சினிமா மூலம் மற்றவர்களை கிண்டல் செய்வது கவலையாக உள்ளது. சென்னையில் வெள்ளம் வந்த போது நீங்கள் விளம்பரத்திற்காக நடித்து ஹீரோவானீர்கள் என்று நான் கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி சரியில்லை என்றால் 1000 எபிசோடை தாண்டி இருக்குமா? நானே 1000 எபிசோடுகளை முடிக்கிறேன். மக்கள் முட்டாள்கள் அல்ல.” என்று சூடாக பதிலளித்தார்.
தனது இந்த பதிலுக்கு பாலாஜி எதையாவது ரிப்ளை செய்வார். அதை வைத்து அவரை சந்தி சிரிக்க வைத்து விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆமாம், லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட இந்த பதிலை ஆர்.ஜே பாலாஜி கண்டுகொள்ளவே இல்லை. ஒரு பதிலும் போடவில்லை.
ஆனாலும் விடவில்லை லட்சுமி ராமகிருஷ்ணன்.
”அமைதி காப்பது அறிவாளித்தனம் அல்ல. என்னை பொறுத்த வரையில் அது கோழைத்தனம், பாசாங்கு செய்வது” என்று இன்னொரு பதிலைக் கொடுத்துப் பார்த்தார்.
ம்ஹூம்… அதையும் கண்டு கொள்ளவில்லை பாலாஜி.
புத்திசாலிப்பையன்!