ஓப்பனிங் கலெக்‌ஷனில் சாதனை படைத்த ‘வேதாளம்’

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

தீபாவளியை டபுள் சந்தோஷத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். ரெகுலரான கொண்டாட்டத்தோடு அஜித்தின் வேதாளம் படம் ரிலீசான சந்தோஷத்தையும் சேர்த்து கொண்டாடி வருகிறார்கள்.

படம் ரிலீசான முதல் நாளே முன்னணி நடிகர்கள் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

படம் ரிலீசான முதல் நாள் மட்டும் வேதாளம் திரைப்படம் 17 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

Related Posts
1 of 4

அஜித்தின் முந்தைய படங்களுக்கு இருந்த ஓப்பனிங்கை விட வேதாளம் படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருந்ததே இந்த வசூலுக்குக் காரணம் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ரஜினி, விஜய் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையும் வேதாளம் திரைப்படம் முறியடித்திருக்கிறதாம்.

அந்த வகையில் ரஜினியின் எந்திரன் திரைப்படம் 11கோடியையும், விஜய்யின் கத்தி திரைப்படம் 12.5 கோடியையும் வசூல் செய்திருந்தது. அந்த வசூலையெல்லாம் வேதாளம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மிஞ்சியிருக்கிறதாம்.

இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர் அதிபர்களே உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள்.