வீர தீர சூரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெகுகாலமாக சறுக்கலைச் சந்தித்து வரும் விக்ரமை வீரதீர சூரன் தூக்கி நிறுத்துமா?

இருவரை என் கவுண்டர் செய்து கொல்ல நினைக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அந்த இருவரும் நடிகர் விக்ரமிடம் தஞ்சம் அடைகிறார்கள். மளிகை கடை நடத்தி தானுண்டு, தன் குடும்பமுண்டு என வாழும் விக்ரம், எஸ்.ஜே சூர்யாவை வீழ்த்தும் டீலுக்குச் சம்மதிக்கிறார். அதன்பின் நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் இந்தப்படம்

Related Posts
1 of 2

தான் எடுத்துக்கொண்ட கேரக்டருக்காக எந்தச் சிரத்தை எடுக்கவும் தயாங்காத நடிகர் விக்ரம். இந்தப்படத்திலும் நல் உழைப்பைப் போட்டுள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு பெரும் ப்ளஸாக அமைந்துள்ளது. எஸ்.ஜே சூர்யா இந்தப்படத்தில் அடக்கி வாசித்துள்ளார். அது நன்றாக எடுபட்டுள்ளது. துஷாரா விஜயன் வழக்கம் போல் தன் நடிப்பில் சிறப்பைச் சேர்த்துள்ளார். இன்னும் படத்திலுள்ள பல கேரக்டர்கள் தரமான நடிப்பை வழங்கியுள்ளனர்

படத்திற்குள் விக்ரம் ஹீரோ என்றால், படத்திற்கு வெளியே ஜிவி பிரகாஷ் தான் ஹீரோ. பின்னணி இசையை அசத்தலாக அமைத்துள்ளார். தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவில் தனி சாம்ராச்சியமே நடத்தியுள்ளார். இரவில் அவர் அள்ளி வந்துள்ள விஷுவல்ஸ் பிரமாதமாக உள்ளது

படத்தின் முன்பாதியில் இருந்த அழுத்தம் பின் பாதியில் இல்லை. பழைய கதை பழகிய கதை என்ற உணர்வு படம் பார்க்கும் போது எழுந்து கொண்டே இருக்கிறது. இன்னும் சற்று மென்க்கெட்டிருந்தால் விக்ரமிற்கு இந்தப்படம் நல்ல ஹிட் ஆக அமைந்திருக்கும். இருந்தாலும் படம் பெரிதாக சறுக்கவில்லை
3/5