தசரா பண்டிகைக்கு வெளியாகிறது, “Venom: Let There Be Carnage”!

Get real time updates directly on you device, subscribe now.

Sony Pictures வெளியீடாக வெளிவந்திருக்கும் Venom: Let There Be Carnage திரைப்படம், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டாம் ஹார்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வெளியான முதல் வாரத்தில், அமெரிக்க திரையரங்குகளில் $90.1 மில்லியன் வசூல் குவித்து, சாதனை படைத்துள்ளது. இது பொதுமுடக்க காலத்திற்கு பிறகு, வெளியான படங்கள் செய்த சாதனையில் மிகப்பெரிய சாதனையாகும். அக்டோபர் மாதபடங்களில் இரண்டாவது மிகப்பெரிய சாதனையென்றும் Comscore தெரிவித்துள்ளது.

இந்த செய்தி இந்திய திரையரங்குகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர் கூட்டத்தை இழுத்து வரும் என்று திரையுலகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இந்திய பாக்ஸ் ஆபிஸை உலுக்கும் வகையில் 3D, IMAX மற்றும் 4DX வடிவங்களில், இந்தி, தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகிறது “Venom : Let there be Carnage” திரைப்படம்.

மஹாராஷ்டிராவில் திரையரங்குகள் அனுமதிக்கபட்டவுடன் அக்டோபர் 22 முதல் இப்படம் வெளியாகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது.