அதிகாரப்பூர்வமா சொல்லியாச்சு… : விஜய் 59வது பட டைட்டில் ‘தெறி’

Get real time updates directly on you device, subscribe now.

theri1

ப்பாடா இப்பவாவது டைட்டிலைச் சொன்னீங்களே என்று நிம்மதியடைந்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

‘கத்தி’யைத் தொடர்ந்து விஜய் கமிட்டான 59-வது படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வரும் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நாள் முதல் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. படம் ஆரம்பிக்கப்பட்ட போதே இயக்குநர் அட்லீயிடம் டைட்டிலைப் பற்றிக்கேட்ட போது இன்னும் முடிவாகவில்லை என்றார்.

அதோடு படப்பிடிப்புக்கு கெளம்பி போய் விட்டார். இதனால் விஜய் 59 படத்துக்கு காக்கி, வெர்றி, தாறுமாறு என பல டைட்டில்கள் உலாவிக் கொண்டிருந்தன.

Related Posts
1 of 79

ஆனால் இப்போது படத்துக்கு ‘தெறி’ என்று அதிகாரப்பூர்வமாக டைட்டிலை அறிவித்துள்ளனர். அஜித் நடித்த வேதாளம் படத்தில் தெறிக்க விடலாமா என்கிற வார்த்தையை அஜீத் பேசியிருப்பார். அதிலிருந்து விஜய் படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

‘தெறி’ என்றால் ‘தெறிக்க விடுறது’ அதாவது டைட்டிலை உச்சரித்தவுடன் உள்ளுக்குள் ஒரு உற்சாகம் கரைபுரள ஆரம்பித்து விடும். குதூகலம் வந்து விடும். ஒரு தெம்பு வந்து விடும்.

அந்தளவுக்கு இந்த டைட்டில் அமைந்திருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சபட்ச உற்சாகத்தில் டைட்டிலை தெறி என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் வைரலாக்கி ‘தெறி’க்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.