‘எங்க வீட்டுப் பிள்ளை’ டைட்டில் சர்ச்சை : சிக்கினார் விஜய் பட நாயகி!

Get real time updates directly on you device, subscribe now.

vijay

ரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

இதனால் படத்தை விஜய் 60 என்றே ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இயக்குநர் பரதன் படப்பிடிப்பை முடிக்கும் தருவாய்க்கு வந்து விட்டதால் படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என்ற எம்ஜிஆர் பட டைட்டிலை வைக்க ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியானது.

Related Posts
1 of 77

அந்தச் செய்தி வெளியானதும் எம்ஜிஆர் ரசிகர்கள் கொதித்துப் போய் எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது படப்பெயரை விஜய் படத்துக்கு வைத்தால் போராட்டம்தான் என்று எம்ஜிஆர் ரசிகர்கள் அறிவித்திருப்பதோடு, வரும் 14 -ஆம் தேதி விஜய் வீட்டுமுன் போராட்டம் நடத்தப் போவதாகவும் அதிரடியாக அறிவித்தனர்.

திடீரென்று இந்த டைட்டில் ரகசியம் வெளியாகக் காரணம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வரும் அபர்ணா வினோத் தான் காரணம் என்கிறார்கள். இவர் தான் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் படத்தின் பெயர், எங்க வீட்டுப் பிள்ளை என்று சொல்கிறார்கள்.

ஆனால் அபர்ணாவோ அய்யோ அதெல்லாய் பொய் அந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையதே இல்லை. யாரோ ஒருவர் என் பெயரை பயன்படுத்தி டைட்டில் ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி எனக்கும், டைட்டில் ரகசியம் வெளியானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

டைட்டில் சொல்லிட்ட சர்ச்சை முடிஞ்சிடும் அதைச்செய்ய வேண்டியது தானே..?