நவம்பர் 15ல் ZEE5ல் பிரீமியராகிறது ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, சமீபத்தில் வெளியான தெலுங்கு பிளாக்பஸ்டரான மா நன்னா சூப்பர் ஹீரோ படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. லூசர்ஸ் சீரிஸ் மூலம் பாராட்டுக்களைக் குவித்த, அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கியுள்ள இந்த உணர்ச்சிகரமான குடும்ப டிராமா திரைப்படத்தில், சுதீர் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனுபவமிக்க நடிகர்களான சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். CAM Entertainment உடன் இணைந்து V Celluloids மற்றும் VR Global Media ஆகிய நிறுவனங்களின் கீழ் சுனில் பலுசு தயாரித்துள்ள “மா நன்னா சூப்பர் ஹீரோ”, தந்தை-மகன் உறவுகளின் சிக்கல்களை, நாம் நேசிப்பவர்களுக்காக நாம் செய்யும் தியாகங்கள் மற்றும் பெரும்பாலும் உறவுகளில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்கிறது. திரையரங்குகளில் ரிலீஸைத் தவறவிட்டவர்களுக்கு, நவம்பர் 15 முதல் ZEE5 இல் இப்படம் பிரத்தியேகமாகக் கிடைக்கும், பார்வையாளர்கள் இந்த மனதைத் தொடும் திரைப்படத்தை தங்கள் வீட்டிலிருந்து அனுபவிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.