அஜித்தை பார்ப்பதற்காக 12 மணி நேரம் காத்துக் கிடந்த விஜய் ரசிகர்கள்!
‘விசுவாசம்’ படத்துக்காக பிரம்மாண்டமான செட் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படப்பிடிப்புக்காகச் செல்ல தயாராக இருந்தார் அஜித். அதற்குள் திரையுலகில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
சரி வீட்டில் ஏன் சும்மா இருப்பானேன் என்று யோசித்தவர் தனக்குப் பிடித்தமான குட்டி விமானங்களை இயக்கும் ஏரோமாடலிங்கில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.ஏற்கனவே இதில் அதிக ஆர்வம் கொண்ட அஜீத், நேற்று முன்தினம் திடீரென்று சென்னையிலுள்ள எம்ஐடிக்கு (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) சென்றுள்ளார். அங்குள்ள இத்துறைக்கு சென்ற அவர் இதில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
அஜித் அங்கு வந்ததைக் கேள்விப்பட்டதும் உற்சாகமான மாணவர்கள் அவரைப் பார்ப்பதற்காக சுமார் 12 மணி நேரமாக காத்துக் கிடந்தனர். மாணவர்கள் காத்திருக்கும் தகவல் அஜித்தின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா என்று தெரியவில்லை. இதனால் நெடுநேரமாகியும் அஜித் வரவில்லை. வந்த வேலை முழுவதும் முடிந்த பிறகு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட வந்தபோது அஜித்தை மாணவர்கள் சந்தித்துள்ளனர்.
அஜித்தைப் பார்த்தவுடன் ‘உங்க கூட போட்டோ எடுக்கிறதுக்காக நாங்க 12 மணி நேரமா காத்திருக்கிறோம்’ என மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் இந்த பதிலைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அஜித் ‘நான் 26 வருஷமா உங்களுக்காக காத்திருந்தேன்’ என்று சொல்லி சிரித்தாராம். அதாவது தான் திரையுலகிற்கு வந்து 26 வருடம் ஆவதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார்.
அஜித்தை பார்ப்பதற்காக காத்திருந்த அத்தனை ரசிகர்களும் விஜய்யின் ரசிகர்கள் என்பது கூடுதல் தகவல்.