பூஜைக்கு முன்பே படத்தின் பிசினஸ் ஓவர்… : ரஜினியின் இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி!

Get real time updates directly on you device, subscribe now.

vijay-sethupathi

ரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு, கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

இப்படத்தில் இடம் பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

இப்போது மீண்டும் அதே தேதியான (அக்டோபர் 2) தங்களது அடுத்த படமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி – இயக்குனர் கோகுல் – இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி.

Related Posts
1 of 31

இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2) பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாக அறிமுகமான சாயிஷா சாய்கல் ‘ஜுங்கா’ படத்தின் நாயகியாக நடிக்கிறார்.

இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ள ‘ஜுங்கா’திரைப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்து விட்டது. படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின்உரிமையை மிகப்பெரிய விலைகொடுத்து வாங்கியுள்ளது தமிழ்த் திரையுலகில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

யோகி பாபு உட்பட பலநட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில்நடிக்கிறார்கள். இவர்களின்கூட்டணியோடு விஜய்சேதுபதியின்‘கல கல’ காமெடி எபிசோடுகளைப்பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கின்றனர்.