தமிழ் தெரியாத நடிகைகளால் படும் அவஸ்தைகள்! : சொல்கிறார் விக்ரம் பிரபு
‘சைவம்’ படத்தைத் தொடர்ந்து மாயம் செய்யக் கிளம்பி விட்டார் இயக்குநர் விஜய்.
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் நாளை மறுநாள் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகப் போகிறது ‘இது என்ன மாயம்.’ மேஜிக் பிரேம்ஸ் தயாரித்துள்ளது.
படத்தோட விளம்பரங்களைப் பார்த்தா ஹீரோ விக்ரம்பிரபு படத்துல மேஜிக் பண்ற ஆளா வர்ற மாதிரி தெரியும். ஆனா படம் அப்படி இல்லையாம். இது முழுக்க முழுக்க ஒரு லவ்-காமெடி படம் என்கிறார் இயக்குநர் விஜய்.
காதலே ஒரு மேஜிக் மாதிரி தான். இந்த உலகத்துல எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஏதாவது ஒரு டைம்ல ஏதாவது ஒரு பையனை புடிச்சிருக்கும். அதேமாதிரி எல்லாப் பசங்களுக்கும் ஏதாவது ஒரு பொண்ணைப் புடிச்சிருக்கும். ஆனா பையனோ, பொண்ணோ ரெண்டு பேருமே அதை சம்பந்தப்பட்டவங்க கிட்ட உன்ன எனக்குப் பிடிச்சதுன்னு சொல்லியிருக்க மாட்டாங்க.
அப்புறம் அவங்க ரெண்டு பேருமே வேற வேற ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்கவங்க வேலையை பார்த்துக்கிட்டிருப்பாங்க. இந்த சூழல்ல நம்மளோட முன்னாள் காதலியை நமக்குப் பிடிச்சப் பொண்ணை நேர்ல மீட் பண்ற சந்தர்ப்பம் கெடைச்சால் என்ன நடக்கும்? அதுக்கப்புறம் அவங்களோட ஃலைப் எப்படி ஆகும்கிறதைத்தான் இந்தப் படத்துல நான் சொல்லியிருக்கேன்.
நம்மளோட முன்னாள் காதலியை திடீர்னு பார்க்கிறப்போ அதென்ன மாயமோ தெரியல. நான் அவளை மீட் பண்ணினேன்னு சொல்லுவோம்ல அதுக்காகத்தான் ‘இது என்ன மாயம்’னு படத்துக்கு டைட்டில் வெச்சேன். படத்தைப் பார்க்கிற எல்லா ஆடியன்ஸுக்கும் தங்களோட பழைய காதலை ஞாபகப்படுத்திப் பார்க்க வைக்கும்.
2009 ஆம் ஆண்டு கொச்சியில ஆரம்பிக்கிற காதல் 2015-ல வரும் போது எப்படி இருக்கும்னு ரெண்டு கால கட்டங்களை படத்துல காட்டியிருக்கேன்.
சரி விக்ரம்பிரபு என்ன சொல்கிறார்? இயக்குநர் விஜய் சார்கிட்ட கதையை கேட்ட உடனே எனக்குப் புடிச்சுப் போச்சு. என்னோட கேரியர்ல ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமா பண்ணணும்னு ஆசைப்பட்டுத் தான் நடிச்சிக்கிட்டிருக்கேன். அந்த வகையில இந்தப்படமும் ஒரு நல்ல படமா இருக்கும்.
ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் கூட நடிச்சதுல எந்த சங்கடமும் இல்லை. ஏன்னா அவங்களுக்கு நல்லா தமிழ் தெரியுது.
மொழி தெரியாத நடிகைகள் கூட நடிக்கணும்னா பெரிய சங்கடம். டைரக்டர் ஒண்ணு சொல்லிக்கொடுப்பார். அவங்க அதை தப்பா புரிஞ்சுக்கிட்டு நடிக்கிறபோ நாமும் கூட சேர்ந்து தப்பா செய்ய வேண்டியிருக்கு. ஆனா தமிழ் தெரிஞ்ச நடிகைகள் கூட நடிக்கிறப்போ அந்த சங்கடமே இல்லை.
‘இவன் வேற மாதிரி’ படத்துல சுரபி கூட நடிக்கிறப்போ இந்த அவஸ்தை இருந்துச்சு. ஆனா லட்சுமிமேனன், ப்ரியா ஆனந்த் இவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியிறதுனால அவங்க கூட நடிக்கிறப்போ எந்தக் கஷ்டமும் இல்லை என்றார் விக்ரம்பிரபு.