மாதம் 5,000 ரூபாய் உதவி : பழம்பெரும் பின்னணி பாடகியின் துயர் துடைத்த விஷால்!

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

டிகர் சங்கத்தை கைப்பற்றிய பிறகு சங்க உறுப்பினர்களுக்கு ஒன்றென்றால் ஓடி ஓடி உதவிகளை செய்து வருகிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி.

குறிப்பாக நலிந்த கலைஞர்கள் கஷ்டப்படுவதை கேள்விப்பட்டாலோ, ஏதாவது செய்தி காதுகளுக்கு வந்தாலோ உடனடியாக உதவியை செய்து வருகிறார் நடிகர் விஷால்.

அந்த வகையில் பழம் பெரும் பின்னணி பாடகி சரளா அம்மாவுக்கு நிதி உதவி செய்திருக்கிறார் விஷால்.

Related Posts
1 of 74

இது குறித்து விஷால் சார்பில் கூறியிருப்பதாவது :

”ரத்த கண்ணீர்”, ”தூக்குமேடை”, ”பேசும் தெய்வம்” என்ற படத்தில் “நூறாண்டு காலம் வாழ்க…. நோய் நொடி இல்லாமல் வளர்க…’’ சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி “சரளா அம்மா” அவர்கள் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருகிறார்கள்.

இந்த செய்தியை பத்திரிக்கை வாயிலாக அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடனே அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி அவர்களுக்கு மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000. (ஐந்து ஆயிரம்) தருவதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்து உள்ளார்.