வரலட்சுமி தான் என் மனைவி : திருமண ரகசியத்தை உடைத்தார் விஷால்!
நடிகர் சங்கத் தேர்தலில் எதிர் எதிர் அணியில் இருந்தாலும் மாமனும், மருமகனும் இன்னைக்கு அடிச்சுக்குவாங்க, நாளைக்கே ஒண்ணு கூடிக்குவாங்க. இதுல நம்ம ஏன் கருத்து சொல்லி பொல்லாப்புல மாட்டணும் என்று வெளிப்படையாக சொன்னவர்களே அதிகம்.
அந்தளவுக்கு விஷால் – வரலட்சுமி காதல் கோடம்பாக்கம் மட்டுமல்ல, சினிமா ரசிகர்கள் அத்தனை பேருமே அறிந்து வைத்திருந்த ஒன்று.
ஆனால் விஷாலிடம் அவரது திருமணத்தைப் பற்றி நிருபர்கள் எப்போது கேள்வி கேட்டாலும் சிரித்துக் கொண்டே சென்று விடுவார். அல்லது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கவும் என்னுடைய திருமணம் நடைபெறும் என்று சொல்லுவார்.
இப்படியே பல வருடங்களை கடத்திக்கொண்டே மீடியாக்களிடம் எஸ்கேப் ஆனவர் இப்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான வேலை ஆரம்பித்திருப்பதால் தனது திருமணம் பற்றிய ரகசியத்தையும் போட்டு உடைத்திருக்கிறார் விஷால்.
இது குறித்து சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் பேசிய விஷால் ‘நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி முடித்ததும் அங்குள்ள மண்டபத்தில் எனது திருமணம் தான் முதல் திருமணமாக நடக்கும்’’ என்றவர் அடுத்து சொன்னது தான் ஹைலைட் அப்படியானால் ‘லட்சுமிகரமானவர்’ உங்களுக்கு மனைவியாக வருவாரா? என்று கேட்டபோது ஆமாம் என்பது போல் அவர் புன்னகையுடன் தலையாட்டினார்.
அந்த லட்சுமிகரமானவர் லட்சுமிமேனன் இல்லை என்பதை ஏற்கனவே விஷால் உறுதிப்படுத்தி விட்ட நிலையில் வரலட்சுமி தான் அந்த மணமகள் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
ஜோடி நீடூடி வாழ்க…