Ace- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சூதாட்டமும் கொள்ளையும் அடிக்கும் ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதே Ace

கதை நடக்குமிடம் மலேசியா. யோகிபாபு மலேசியாவில் பெரிய பிஸ்னெஸ் மேன் எனச் சொல்லித்திரிகிறார். அவரிடம் வந்து சேர்கிறார் ஹீரோ விஜய்சேதுபதி. அவர் தங்குமிடத்திற்கு எதிரில் ஹீரோயின் இருக்கிறார். விசே அவரோடு காதலாகிறார். இவர்கள் காதல் போக எக்ஸ்ட்ரா ஒரு பிரச்சனைக்குள் சிக்குகிறார் ஹீரோ. மேலும் காதலிக்கும் ஒரு பிரச்சனை வர, இரு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பணம் என்பதாக இருக்கிறது. அந்தப் பணத்தை விஜய்சேதுபதி கொள்ளை அடிக்கிறார். அதில் அவர் மாட்டினாரா.. தப்பித்தாரா? என்பதே கதை

Related Posts
1 of 3

கதாநாயகன் விஜய்சேதுபதி யாரையும் ஓடிப்போய் அடிக்க மாட்டேன்கிறார். அனைவரும் ஓடிவந்து அவரிடம் அடி வாங்குகின்றனர். இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுங்க விசே ப்ரோ. நாயகி தன் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாப்பாத்திரங்கள் டம்மி செய்யப்பட்டுள்ளது

ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களில் ஏமாற்றியுள்ளார். சாம்.சி. எஸ் பின்னணி இசையில் காப்பாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் தனது வேலையை குறைவின்றிச் செய்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் இல்லாமலே பைட் சீன்களை எடுத்துள்ளார்களோ என்ற டவுட் எல்லாச் சண்டைக்காட்சிகளிலும் வந்தது

படத்தின் கதை மிகவும் சாதாரண கதை என்பதால் கதை மாந்தர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் சில்லியாகவே தெரிகிறது. கேரக்டர்களுக்கான ரைட்டிங்-ஐ இன்னும் ஸ்ட்ராங் பண்ணியிருந்தால் படமும் நல்ல சம்பவம் பண்ணியிருக்கும். ஜஸ்ட் மிஸ்.
2.5/5