கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதுப்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

’காற்றின் மொழி’ படத்தைத் தொடர்ந்து கல்யாண், ராஜ் ஆகியோர் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜோதிகா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதுப்படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறார் ஜோதிகா.

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 27-ம் தேதி கோவாவில் தொடங்கியது.

‘த்ரிஷ்யம்’, ‘பாபநாசம்’ படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

Related Posts
1 of 168

மேலும் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருடன் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். படத்திற்கு 96 படப்புகழ் கோவிந்த் வசந்த் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.