குட்பை லிங்குசாமி : மிஸ்கினுடன் கை கோர்த்தார் விஷால்!
விஷாலைப் பொருத்தவரை ஒரு படம் முடியவும் அடுத்த படத்துக்கு தயாராகி விடுவார். தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகிக் கொண்டிருக்கின்றன.
அப்படித்தான் மருது படப்பிடிப்பு முடிந்த கையோடு லிங்குசாமியின் சண்டைக்கோழி 2 படத்துக்கு கால்ஷுட் கொடுத்திருந்தார் விஷால்.
ஆனால் பைனான்ஸ் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சனையால் சண்டைக்கோழி படத்தை ஆரம்பிப்பதற்கான அறிகுறியே லிங்குசாமியிடம் தென்படவில்லை.
விஷாலும் லிங்குசாமி கூப்பிடுவார் என்கிற எதிர்பார்ப்பில் வேறு எந்த டைரக்டருக்கும் கால்ஷூட் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.
எத்தனை நாளைக்குத்தான் அவரும் அமைதியாகவே இருப்பார். சண்டைக்கோழி 2 வை ஆரம்பிக்காத லிங்குசாமி பையா படத்தின் ஹிந்தி வெர்ஷனை இயக்கப் போவதாக செய்தி விஷாலின் காதுகளை எட்டவும் மனுஷன் டென்ஷனாகி விட்டார்.
அவரிடம் எந்த பேச்சும் பேசாமல் தானே சண்டைக்கோழி 2 படம் நிறுத்தப்பட்டு விட்டது. என்று அறிவித்ததோடு மட்டுமில்லாமல் இயக்குநர்கள் படம் இயக்கும் வேலையை மட்டும் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அட்வைஸ் செய்திருந்தார்.
லிங்குசாமியுடன் படம் இல்லை என்கிற நிலையில் இப்போது மிஸ்கினோடு கை கோர்த்திருக்கிறார் விஷால்.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப் போகும் இந்தப் படத்தை மிஸ்கின் தற்போது நடித்து வரும் சவரக்கத்தி படப்பிடிப்பை முடித்த கையோடு இயக்கவிருக்கிறார்.
கூட்டணி ரொம்பப் புதுசு, படமும் அப்படியே இருக்கட்டும்!