கடனுக்கு மேல் கடன் : தயாரிப்புக்கு தற்காலிக விடுமுறை கொடுத்த விஷால்!
ஆரம்பத்தில் அப்பாவின் சொந்தப்பட நிறுவனம் தயாரித்த படங்களில் நடிக்க ஆரம்பித்த விஷால் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவும் வெளிக்கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்போதும் ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுக்கவும் விஷால் பிலிம் பேக்டரி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக படங்களை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் சொந்தமாக தயாரித்த படங்களில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் எல்லாமே எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை. இருந்தாலும் அங்கு இங்குமாக வட்டிக்கு கடன் வாங்கி படங்களை தயாரித்து வந்தார்.
இப்போது அந்த கடன் அளவுக்கு மீறிப்போக ஆரம்பித்திருப்பதால் உஷாரானவர் தனது சொந்த பேனரில் தயாரிப்புக்கு தற்காலிகமாக விடுமுறை கொடுத்திருக்கிறாராம்.
வெளிப்படங்களில் நடித்து அதன் மூலமாக வருகிற வருமானத்தை வைத்து இருக்கின்ற கடன்களை எல்லாம் அடைத்த பிறகு தான் மீண்டும் சொந்த நிறுவனத்தில் படத்தயாரிப்பில் இறங்கப் போகிறாராம் விஷால்.
நல்ல முடிவு!