தாறுமாறான வியாபாரம் : ரிலீசுக்கு முன்பே 100 கோடி கிளப்பில் சேர்ந்த விவேகம்!

Get real time updates directly on you device, subscribe now.

vivegam1

அஜித் தான் நடிக்கிற படங்களின் புரமோஷன்களுக்கு வருவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் படத்தின் நாயகி உள்ளிட்டவர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தான் மீடியாக்களிடம் படத்தைப் பற்றி பேசுவார்கள்.

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் இருப்பதாலேயே அஜித் படங்களின் புரமோஷன்களுக்கு எந்த விழாவும் நடப்பதில்லை. டீஸரோ, ட்ரைலரோ, பாடல்களோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தேதியைக் குறித்து அன்றைய நாள் நடு ராத்திரி 12 மணிக்கு வெளியிட்டு அதகளம் செய்வார்கள்.

அஜித் ரசிகர்களும் தங்களுடைய தூக்கத்தை அடகு வைத்து விட்டு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விடிய விடிய கண்ணு முழி பிதுங்க முழித்திருந்து அதைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

அந்தளவுக்கு அஜித் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு காணப்படுவதால் அவர் நடித்த படங்களில் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

Related Posts
1 of 53

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் வியாபாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகுபலியின் வியாபாரத்துக்கு அடுத்த இடத்தைப் பிடித்து சாதனை செய்திருக்கிறது.

படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் அஜீத் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு அதாவது 120 கோடி ரூபாய்க்கு விவேகம் படம் விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வியாபாரம் மூலம் ரிலீசுக்கு முன்பே 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார் அஜீத் .

இதற்கு முன்பு இந்த சாதனையை ராஜமெளலி இயக்கத்தில் ரிலீசான பாகுபலி 2 படம் தான் செய்திருந்தது. இப்போது அந்தப் படத்திற்கு அடுத்த இடத்தைப்பிடித்து விவேகம் சாதனை படைத்துள்ளது.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் தயாராகியிருக்கும் விவேகம் திரைப்படம் இந்த மாதம் ஆகஸ்ட் 24ம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது.