மே 18 ல் ‘விவேகம்’ டீஸர் ரிலீஸ் : தல ரசிகர்கள் செம ஹேப்பி
”வேதாளம்” படம் ரிலீசாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகி விட்ட நிலையில் மீண்டும் சிவாவுடன் அஜித் இணைந்திருக்கும் ”விவேகம்” படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்பது உறுதியாகி விட்டது.
முன்னதாக அஜித்தின் பிறந்தநாளாக மே 1-ம் தேதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி டீஸர் வெளியாகவில்லை.
இருந்தாலும் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார் இயக்குநர் சிவா. அதை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் ட்ரெண்ட்டிங்கில் வைத்துக் கொண்டாடினர் அஜித் ரசிகர்கள்.
இதற்கிடையே ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக விவேகம் படத்தின் டீஸர் மே 18-ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் சிவா அதுவும் அஜித்துக்கு மிகவும் செண்டிமெண்ட் நாளான வியாழக்கிழமையன்று டீஸரை வெளியிடுகிறது படக்குழு.
சிவா வெளியிட்டுள்ள இந்தச் செய்தியால் உற்சாகமடைந்திருக்கும் அஜித் ரசிகர்கள் எப்படி விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானபோது கொண்டாடி மகிழ்ந்தார்களோ? அதேபோல விவேகம் படத்தின் டீஸரையும் கொண்டாடி மகிழத் தயாராகியிருக்கிறார்கள்.