சொன்னா நம்புங்க… : ‘VSOP’ படத்துக்கு யு சர்ட்டிபிகேட்!
ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படத்திற்கு சென்சாரால் ‘U’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி VSOP படத்தை ரிலீஸ் செய்ய ஆர்யா திட்டமிட்டிருக்கிறார்.
“VSOP படத்திற்கு ‘U’ செர்டிஃபிக்கேட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று VSOP-யும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். நேற்று வெளியான படத்தின் பாடல்களும், டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.