இனிமேல் ‘வாட்ஸ்-அப்’பில் ‘ஹலோ’ பேசலாம்!
இதுவரை ‘வாட்ஸ்-அப்’ மூலம் குரூப்பில் உள்ள நண்பர்களுக்கு மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும் என்கிற நிலை இருந்து வந்தது. அதன் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இனி வாட்ஸ் – அப் மூலம் கால் செய்யும் வசதியும் வந்திருக்கிறது.
இந்த வசதியைப் பெற நீங்கள் வாட்ஸ் அப்பின் 2.11.528 என்ற எண்ணைக் கொண்ட புதிய வெர்ஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். தற்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே இந்த வசதியைக் கொடுத்திருக்கும் வாட்ஸ்-அப் நிறுவனம் சீக்கிரத்திலேயே ஆப்பிள் ஐ ஒ.எஸ், விண்டோஸ் போன்ற மற்ற இயங்குதளங்களுக்கும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
கீழே உள்ள லிங்க்கில் இந்த புது வெர்ஷனை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en