விஜய், அஜித் இருவரில் யார் சிறந்த நடிகர்? – சிவகார்த்திகேயனின் போல்ட்டான பதில்!
தமிழ்சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருடைய படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும்.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதைத் தொடர்ந்து இயக்குநர்கள் ரவிக்குமார், எம்.ராஜேஷ் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்ற விருக்கிறார்.
சமீபத்தில் தனது புதுப்படங்கள் குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜீத் பற்றி மனம் திறந்து கருத்துகளை கூறியிருக்கிறார்.
அதில் இந்திய சினிமாவில் தளபதி விஜய் தான் சிறந்த நடிகர். ஏனெனில், இந்திய சினிமாவில் காமெடி, நடிப்பு, ஆக்ஷன், டான்ஸ் என எல்லா திறமைகளையும் பெற்றவர் விஜய் தான் என்று கூறியிருக்கிறார். அஜீத்தைப் பற்றிக் கூறும் போது அஜீத்தின் படங்களை பார்க்கும்போது என மனதில் ஒரு உத்வேகம் வரும். அவரை முதன் முதலில் நான் நேரில் சந்தித்துப் பேசியது தான் நினைவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.