ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவர்களுடைய புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது’சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.

ஜானி மாஸ்டர் கூறுகையில்,

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் எங்கள் படத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக எனது அடையாளத்தை வளர்க்க, இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் அடுத்த கட்டத்திற்கு வர முடிவு செய்துள்ளேன். நான் ‘சினிமா பண்டி’யைப் பார்த்தேன், அதில் விகாஸின் நடிப்புப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் தலைப்பு ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பது எழுத்தாளர் நரேஷ் காரின் யோசனை, இந்த நல்ல தலைப்பை வழங்கிய அவருக்கு நன்றி. நாங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை ஆசிர்வதித்த ஹீரோ ஷர்வானந்த், ஆயுஷ் ஷர்மா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி. நேற்று ஆயுஷ் ஜியுடன் ஒரு பாடலை இப்படத்துக்காக முடித்துள்ளேன்.

#YathaRajaTathaPraja #யதாராஜாததாப்ரஜா