அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதாரம்!

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் கதிரவன் பேசியதாவது..,
இயக்குனர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி , என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார், இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி. மட்டும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.
#Aadharam