தீராக்காதல்- விமர்சனம்
எக்ஸ் லவ்வரை மீட் செய்து (திருமணத்திற்கு பிறகு) பேசினால்..அந்தப் பேச்சு தொடர்ந்தால் என்னவாகும்?
மனைவி குழந்தை என வாழும் ஜெய் வாழ்வில் அவரது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி வருவதற்கான காரணமும் கதையில் ஸ்ட்ராங்காகச் சொல்லப்பட்டிருகிறது. அன்பே உருவான மனைவி, திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பிற்கு பிறகு தன்னையே நம்பியுள்ள காதலி இவர்கள் இருவரையும் ஜெய் எப்படி பேலன்ஸ் செய்தார் என்பதே படத்தின் கதை
கணவராக/காதலராக என இரு உணர்வுகளை கடத்த வேண்டிய ஜெய் மிக இயல்பாக நடித்து கைத்தட்டல் வாங்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கணவனிடம் அடி வாங்கும் போதும், காதலனிடம் மன்றாடும் போதும் கலங்க வைக்கிறார். ஷிவதா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அந்தக் குட்டிப்பெண்ணும் அல்டிமேட்
சித்துக்குமாரின் பின்னணி இசை அம்சமாக அமைந்துள்ளது. நல்ல இசை என்பது காட்சிகளைத் துருத்தாமல் இருப்பது. அதைச் சரியாகச் செய்துள்ளார் இசை அமைப்பாளர் சித்துக்குமார். ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு நல்ல விஷுவலுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது
நடைமுறையில் உள்ள கதையை கையில் எடுத்து கமர்சியல் ரூட் பிடித்த இயக்குநர் கேரக்டர் ஸ்கெட்சில் தவறியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகான ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் அநியாயத்திற்கு தடம் மாறுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் கேரக்டரும் செயற்கைத் தனமாக அமைந்துள்ளது. முன்பாதி படத்திற்கும் பின்பாதி படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் க்ளைமாக்ஸ் கன்வின்சிங்காக முடிவதால் பார்டரில் தப்பிக்கிறது தீராக்காதல்
3/5
#TheeraKaadhal #தீராக்காதல்