ஆகக்கடவன- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்த வாரத்தின் ஒரு எளிய சர்ப்ரைஸ் ஆகக்கடவன

பைக் பஞ்சரானதால் ஹீரோ தன் நண்பனோடு காத்திருக்கிறார். காத்திருக்கும் இடம் நெடுஞ்சாலை..அந்த நெடுஞ்சாலையில் அவர்களுக்கு ஒரு சிக்கல் நேரிடுகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆகிறார்கள் என்பதாக இருக்கிறது படத்தின் திரைக்கதை

கதையின் நாயகன் ஆதிரன் சுரேஷ் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். திரில்லர் படங்களில் நிறைய அதிர்ச்சி ரியாக்சன்களை கொடுக்க வேண்டியதிருக்கும். அது அவ்வளவு சுலபமல்ல. அதைச் சரியாகச் செய்துள்ளார். வின்சென்ட் S , CR ராகுல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் ஓரளவு நல்ல நடிப்பிற்கு உத்திரவாதமளிக்கிறார்கள்

சாந்தன் அன்பழகன் தனது மிரட்டலான இசையைத் தந்துள்ளார். இன்னும் அதீத மெனக்கெட்டிருந்தால் மிகச்சிறந்த இசை கிடைத்திருக்கும். ஒளிப்பதிவாளர் லியோ V ராஜா சிக்கனமான ப்ரேமிங்கில் கூட அசத்தியுள்ளார். எடிட்டர் உள்பட படக்குழு அனைவருமே நல்லதொரு உழைப்பைக் கொட்டியுள்ளனர்

படத்தை கொஞ்ச கொஞ்சமாக அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் திரைக்கதை உத்தி சிறப்பு. இயக்குநர் தர்மா சிறிய படம் என்பதை உணர்ந்து ரசிகனைக் கட்டிப்போடும் எல்லா வேலைகளையும் செய்துள்ளார். சிறுசிறு காட்சிகளில் கூட நல்ல கவனம் செலுத்தியுள்ளனர். யூகிக்க முடியாத க்ளைமாக்ஸும் அசத்தல். நல்ல நல்ல திறமைகளோடு வரும் சிறிய படங்களையும் படைப்பாளிகளையும் வரவேற்றால் தமிழ்த்திரை இன்னும் வீரியத்தோடு உலக அரங்கில் உலா வரும். ஆக ஆகக்கடவனை வரவேற்போம்
3/5