‘சரக்கு’ மேட்டர் : அசரவே அசராத ப்ரீத் ‘சிங்’!

Get real time updates directly on you device, subscribe now.

SING1

சொக்க வைக்கிற அழகு தான்.

என்ன செய்வது? தமிழில் ஹீரோயினாக நடித்த ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ இரண்டு படங்களும் படு தோல்வியடைந்ததால் தெலுங்கு பக்கம் போய் விட்டார் ராகுல் ப்ரீத் சிங்.

இப்போது சமந்தா, அனுஷ்கா, காஜல் அகர்வால் என முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் கடும் போட்டியாளர் அவர் தான். அவ்வளவு ஏன் சம்பளத்தை கூட 1 கோடியாக்கி விட்டார். அந்தளவுக்கு தெலுங்கில் ராகுல் ப்ரீத் சிங்கின் மார்க்கெட் ஆட்டம் காணாமல் ஸ்டெடியாக இருக்கிறது.

அப்புறம் ஏன் தமிழுக்கு வரவில்லை?

Related Posts
1 of 2

எனக்கு தமிழ்ல சரியான வாய்ப்புகள் அமையல. அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன் என்பவரிடம் பெண்கள் சரக்கடிப்பது பற்றிக் கேட்டால் அசராமல் பதில் சொல்கிறார்.

”இந்த உலகத்துல எல்லாருமே சமம் தான். எப்படி ஆண்களுக்கு எல்லா உரிமையும் இருக்குதோ அதே மாதிரி தான் பெண்களுக்கும் எல்லா உரிமையும் இருக்கு. பெண்கள் சரக்கடிக்கிறாங்களேன்னு யாரும் பிரிச்சுப் பார்க்கத் தேவையில்லை. அதோடு சரக்கடிக்கிறதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். இதுல மத்தவங்க மூக்கை நுழைக்கக் கூடாது” என்கிறார்.

இவ்ளோ ஒப்பனா பேசுற ப்ரீத்திக்கு சரக்கடிக்கிற பழக்கமே இல்லையாம்!

நம்பிட்டோம் சிங்!!!