புது செல்போன் வாங்கிக் கொடுத்தார் சிவக்குமார்! – செல்ஃபி இளைஞர் ஹேப்பி அண்ணாச்சி!
அக்டோபர் 28-ம் தேதி மதுரையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவக்குமார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இளைஞன் ஒருவர் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை தட்டி விட்டார். பொது இடத்தில் அவருடைய அந்த செயல் குறித்து பலதரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரிடமும் தனி வீடியோ மூலம் தன் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.
இருந்தாலும் வருத்தம் தெரிவித்தால் போதுமா? உடைந்து போன செல்போனை யார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதை கவனத்தில் கொண்ட நடிகர் சிவக்குமார் இளைஞர் ராகுலுக்கு கீழே விழுந்த மொபைல் ஃபோனுக்கு பதிலாக சுமார் ரூ.21,000 மதிப்புள்ள புத்தம் புதிய போன் ஒன்றை அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அளித்துள்ளார். நடிகர் சிவக்குமார் சார்பாக அந்த இளைஞனுக்கு அந்த செல்போன் நேரில் வழங்கப்பட்டது.
மொபைலை வாங்கிக் கொண்ட இளைஞர் ராகுல் ”நடிகர் சிவக்குமார் அவர்கள் எனக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி” என்று மகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.
மேலும் இதுகுறித்து விளக்கம் கொடுத்த மார்க்கெட்டிங் மேனேஜர் பழனி ”அந்த நிகழ்ச்சிக்கு சிவக்குமார் சாரை நான் தான் அழைத்து சென்றேன். தங்கிய அறையிலிருந்து கார் ஏறும் வரை 12 பேர் படம் எடுத்துக் கொண்டனர்.
விழா முடிந்த பிறகு 25 பேர் வரை அவரோடு படம் எடுத்துக் கொண்டனர்.
காரில் இருந்து இறங்கி வரும் போது பாதுகாவலரையும் மீறி அந்த பையன் செல்ஃபி எடுக்க முயன்றான்.அதனால் தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. தயவு செய்து
புரிந்து கொள்ளுங்கள்.
” என்றார்.