அஞ்சலி டேட்ஸ் வேணுமா..? : இவரை இம்ப்ரஸ் பண்ணுங்க போதும்!

Get real time updates directly on you device, subscribe now.

anjali1

மிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இல்லாவிட்டாலும் யதார்த்தப் படங்களில் நடிப்பதில் முன்னணியின் இருந்தார் அஞ்சலி.

மார்க்கெட் ஸ்டெடியாகிக் கொண்டிருக்கும்போதே சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திராவுக்கு ஓடிப்போனார். அங்கு ஒன்றிரெண்டு படங்களோடு பேக்கப் ஆனவர் வாய்ப்பு இல்லாததால் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

இப்போது ‘இறைவி’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவர் புதுப்படங்களைத் தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அதற்கு அவர் பின்னணியில் இருப்பவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், இயக்குநருமான கோனா வெங்கட் தானாம்(?).

Related Posts
1 of 5

தன்னைத் தேடி எந்த மொழிப்படம் வந்தாலும் முதலில் கோனா வெங்கட்டிடம் தான் அட்வைஸ் கேட்கிறாராம் அஞ்சலி. அவர் கதையைக் கேட்டு ஓ.கே சொன்னால் மட்டுமே அந்தப் படத்துக்கு கால்ஷூட் கொடுக்கிறார்.

தன்னை விட வயதானவரான பாலகிருஷ்ணாவின் 99-வது படமான ‘டிக்டேட்டர்’ படத்தில் அஞ்சலி நடிக்க ஒப்புக்கொண்ட போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அந்தப்படத்தில் நடிக்கச் சொன்னதே கோனா வெங்கட் தானாம். அவர் அட்வைஸ் படி தனது புதுப்படங்களை ஒப்புக்கொண்டு வரும் அஞ்சலி அவர் என்னுடைய ‘காட்பாதர்’ மாதிரி என்று சொல்லி சமாளிக்கிறார்.

அஞ்சலி கால்ஷூட்டைத் தேடி அலையும் இயக்குநர்கள் யாரைப் பிடித்தால் கிடைக்கும் என்று யோசிக்கத் தேவையில்லை.

கோனா வெங்கட்டை கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணினால் போதும், அஞ்சலி டேட்ஸ் ரெடி!