சிம்புவுக்கு ஜோடியா..? : தெறித்து ஓடிய கீர்த்தி சுரேஷ்

Get real time updates directly on you device, subscribe now.

KEERTHI

சிம்பு படம் ரிலீசாவதில் தான் சமீபகாலமாக சிக்கல்கள் ஏற்படுகிறது என்று பார்த்தால் இப்போது அவரோடு ஜோடியாகவே நடிக்க கதாநாயகியை தேடுவதே பெரிய சிக்கலாகியிருக்கிறது.

இது நம்ம ஆளு படத்துக்குப் பிறகு சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார்.

மூன்று கேரக்டர்களில் இதில் நடிக்கும் சிம்புவுக்கு ஒரு ஜோடி ஸ்ரேயா கிடைத்து விட்டார்.

அதனால் சிம்புவுடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதற்கட்ட படப்பிடிப்பாக முடித்து விட்டார் இயக்குநர் ஆதிக்.

Related Posts
1 of 42

இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்னொரு ஜோடி கிடைக்காததால் தாமதமாகிறதாம்.

இன்னொரு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி நடிகையாகியிருக்கும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்திருக்கிறார்கள்.

அவரோ சிம்பு படமா..? நமக்கெத்து வம்பு என்று நோ சொல்லி விட்டாராம்.

நாயகி கிடைக்காததால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருக்கிறது.