ஒரு நடிகனுக்கு இந்த அக்கறை கூட இல்லேன்னா எப்படி? : அசத்திய சிவகார்த்திகேயன்

எல்லா முன்னணி ஹீரோக்களின் வெற்றிக்குப் பின்னாலும் அவர்களுடைய இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அப்படி கிடைக்கின்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ரசிகர்களின் ஆதரவு அவர்களின் ஆயுள் முழுவதும் தேவைப்படுகிறது.
ஆனால் எத்தனை பேர் தங்களை கடவுளாக பூஜித்து கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து, அவர்களுடைய ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதெல்லாம் சொந்தக் காசைப் போட்டு ஊரெங்கும் போஸ்டர்களை ஒட்டி திருவிழா போலக் கொண்டாடி மகிழும் ரசிகர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் வெற்றிக்குப் பின்னாலும் அவருடையை பல கட்ட முயற்சிகளும், பெரும் உழைப்பும் இருக்கிறது. அதே சமயம் இன்றளவும் அவரது தொடர் வெற்றிக்கு அவரது ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் முக்கிய காரணம் என்பதை அவரே மறுப்பதற்கில்லை.
அப்பேர்ப்பட்ட ரசிகர்களின் சின்ன சின்ன விஷயங்களில் கூட பாஸிட்டீவ்வான கருத்தைச் சொல்வது ரசிகர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
தற்போது சொந்தத் தயாரிப்பான ‘ரெமோ’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் இன்று ஆரம்பமாகியிருக்கும் பிளஸ் டூ பொதுத்தேர்வெழுதும் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மறக்காமல் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதோடு தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருங்கள், உடம்பை நன்றாகவும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் அக்கறையுடன் வாழ்த்தியிருக்கிறார்.
அவரின் இந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ரசிகர்களும் ”சிம்ப்ளி சூப்பர்..!” ”கிரேட் சிவகார்த்திகேயன் அண்ணா…” என்று உற்சாகமாக பதில் கொடுத்திருக்கிறார்கள்.
நேசிப்பவர்களை நேசிப்பது தானே வாழ்க்கை… வெல்டன் சிவகார்த்திகேயன் சார்!