புதுசா ஒரு ப்ளான் : கணவருக்காக தயாரிப்பாளர் தேடும் சிநேகா!

Get real time updates directly on you device, subscribe now.

prasanna

டிகை சிநேகாவை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நடிகர் பிரசன்னாவுக்கு ‘புலிவால்’ படத்துக்குப் பிறகு பெரிதாக புதுப்பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தன் காதல் மனைவியோடு கடைதிறப்பு, லேண்ட் புரமோஷன் உள்ளிட்ட விளம்பர நிகழ்ச்சிகளில் தலை காட்டி காசு பார்த்து வந்தார்.

வாய்ப்பே இல்லாமல் இருக்கும் தன் கணவரை எப்படியாவது தமிழில் முன்னணி ஹீரோவாக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிநேகா சொந்தமாக அவரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார்.

Related Posts
1 of 4

இதற்காக ஆபீஸ் எல்லாம் போட்டு ஆரம்ப கட்ட வேலைகளை முடுக்கி விட்டார். படம் தயாரிப்பதற்கான பாதி பணத்தை மட்டுமே கைவசம் வைத்திருந்த சிநேகா இப்போது மீதி பணத்துக்காக ஒரு நல்ல பைனான்ஸ் பார்ட்னரை தேடி வருகிறாராம். தனக்குத் தெரிந்த யார் யாரிடமெல்லாமோ பேசிப்பார்த்தும் ஹீரோ பிரசன்னா என்றதும் பேக்கடித்து விடுகிறார்கள்.

இதனால் மனம் நொந்து போன சிநேகா யாராவது இணை தயாரிப்பாளராக வந்தால் படம் தயாரிப்பது, இல்லையென்றால் முழுவதுமாக பணத்தை தயார் செய்த பிறகு தயாரிப்பை ஆரம்பிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம்.

புன்னகை அரசிக்கே இந்த நெலைமையா?