காத்திருந்த நிருபர்? கேரவனில் ஓய்வெடுத்த சுஹாசினி!
மதுரையில் பிறந்த மணிரத்னம் தான் தென்னிந்திய ஊடகங்களை கண்டு கொள்வதில்லை என்றால் அவரது மனைவி சுஹாசினியும் அவ்வாரே இருப்பது தான் ஆச்சரியம்.
‘சால்ட் மேங்கோ ட்ரீ’ என்ற மலையாளப் படத்தில் நடிப்பதற்காக கேரளா சென்றிருக்கிறார் சுஹாசினி.
அவர் வருகையைக் கேள்விப்பட்ட ஒரு வார இதழின் நிருபர் சுஹாசினியை பேட்டி எடுக்கலாம் என்று அந்தப் படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார்.
போனவரிடம் வார இதழ் ஒன்றை கையில் வாங்கி இதை படித்து விட்டு அப்புறம் தான் பேட்டி தருவேன் என்றவர் அப்படியே கேரவனுக்குள் போய் விட்டார்.
அவர் சொன்னதை நம்பி வெளியே பேட்டிக்காக காத்திருந்த நிருபர் ஒரு மணி நேரத்தை தாண்டியும் சுஹாசினியிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் அவருடைய உதவியாளரை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
அவரோ அப்டியா.. மேடம் அப்படி எந்த விஷயத்தையும் என்கிட்ட சொல்லல அவங்க தூங்கிக்கிட்டு இருக்காங்க… என்றாராம்.
அதிர்ச்சியடைந்த நிருபர் இயக்குநரை அழைத்து வண்டை வண்டையாக திட்டிவிட்டு இடத்தை காலி செய்தாராம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட மொத்த மலையாள நிருபர் கூட்டமும் இப்போது பற்களை நரநரத்துக் கொண்டிருக்கிறது…