பாஷை தெரியாத ஊர்ல பொறுப்பில்லாம இருக்கியேம்மா காஜல்..?
இந்த நேரத்துக்கு ஹன்ஷிகா, சமந்தா ஆகியோரின் படங்களைக் கூட காஜல் தான் கையில் வைத்திருக்க வேண்டும்.
கொஞ்சமாவது பொறுப்பு இருந்தால் தானே அவரை வைத்து படமெடுக்க ஆசைப்படும் இயக்குநர்கள் நிம்மதியாக படமெடுப்பார்கள்.
இனி சுசீந்திரன் ஒரு புதுமுகத்தைக் கூட வைத்து படமெடுத்து விடுவார். தப்பித் தவறி கூட காஜல் அகர்வால் பக்கம் போக மாட்டார் போலிருக்கிறது.
விஷாலை வைத்து ‘பாயும்புலி’ படத்தை இயக்கிய சுசீந்திரன் காஜலை படப்பிடிப்பில் நடிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டார்.
ஒரு ஷாட்டுக்கும், இன்னொரு ஷாட்டுக்கும் ஐந்து நிமிட இடைவெளி கிடைத்தால் போதும், உதவி இயக்குநர்கள் வந்து தரும் ஸ்க்ரிப்ட் பேப்பரை பார்த்து அடுத்த சீனுக்கு தயாராகாமல் செல்போனையே நோண்டிக் கொண்டிருப்பாராம்.
சரி அப்படி வந்தவராவது ஒரே டேக்கில் சீனை ஓ.கே செய்தாரா என்றால் அதுவும் இல்லை.
இப்படித்தான் மொத்த படப்பிடிப்பையும் செல்போனும் கையுமாக கடத்தியிருக்கிறார் காஜல் அகர்வால்.
பாஷை தெரியாத ஊர்ல இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்களே காஜல்…???