‘தெறி’ படத்துக்காக விஜய் எடுத்த ரிஸ்க்!

Get real time updates directly on you device, subscribe now.

theri1

சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது கூட விஜய்யை எங்கும் பார்க்க முடியவில்லை.

அவரது நினைப்பு, உழைப்பு எல்லாமே ‘தெறி’ படத்தின் மீது மட்டுமே இருந்ததால் அவர் சார்பில் அவரது ரசிகர்கள் தான் தங்கள் கைக்காசைப் போட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தார்கள்.

அந்தளவுக்கு தன்னை வெளியில் காட்டிக் கொள்ளாமல் படப்பிடிப்பில் இருந்த விஜய் ஒருவழியாக படப்பிடிப்பை முடித்து விட்டார்.

இப்படத்தில் ரசிகர்களை குஷிபடுத்த அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

Related Posts
1 of 81

காட்சிப்படி விஜய் அந்த பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்கு 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குத்திக்க வேண்டும். இதற்காக டூப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விஜய்யோ ”டூப் எல்லாம் வேண்டாம். நானே குதிக்கிறேன்” என்று உயிரை பணயம் வைத்து குதித்து நடித்துக் கொடுத்தாராம்.

மேற்கண்ட சீனை படமாக்கும் போது அட்லியே கொஞ்சம் டென்ஷனோடு தான் படமாக்கினாராம்.

சீனை எடுத்த பிறகு போட்டுப் பார்த்த போது அவ்வளவு இயல்பாக வந்திருந்ததாம். இந்த சண்டைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் என்கிறது ‘தெறி’ யூனிட்.

ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ரிலீசான ‘குஷி’ படத்திலும் இப்படி ஒரு ரிஸ்க்கை விஜய் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.