அஜித்தோட நல்ல மனசு : இப்போ பல்கேரியாவிலும் ரொம்ப பேமஸ்..!

மீடியாக்களிடம் தலை காட்டவில்லை என்றாலும் படப்பிடிப்பில் அஜித்தை அங்கிருக்கும் யார் வேண்டுமானாலும் மிக எளிதாக அணுகலாம். இதை அவருடன் சேர்ந்து நடித்த அப்புக்குட்டி போன்றோர் தரும் நற்சான்று.
ஏனோ தானோவென்றிருந்த அப்புக்குட்டிக்கு தனியாக ஒரு போட்டோஷுட்டையே நடத்தி அவருடைய பெயரையும் மாற்றிவர் அஜித் தான்.
அப்புக்குட்டி போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும் அஜித்தைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட அஜித்தின் எளிமையையும் அவரது நல்ல மனசையும் லேட்டஸ்ட்டாக புகழ்ந்திருப்பது இங்கிருப்பவர்கள் அல்ல, பல்கேரியா கலைஞர்கள்…
அஜித்தின் ‘விவேகம்’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த சில வாரங்களாகவே பல்கேரியாவில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் எந்தப்படத்திலும் அங்குள்ள துணை நடிகர்களை பெரும்பாலும் பயன்படுத்தியதில்லை. ஆனால் அஜித்தோ தன்னுடைய ‘விவேகம்’ படத்தில் அங்குள்ள வறுமையில் வாடும் துணை நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
எங்கள் நாட்டிற்கு பல நாடுகளில் இருந்து படம் எடுக்க வந்தாலும் அவர்கள் யாரும் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. எங்கள் நாட்டிலும் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் நாங்கள் சும்மா தான் இருக்கிறோம். அதைக் கேள்விப்பட்டதும் விவேகம் படத்தில் நடிக்க எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் தல அஜித் என்று நெகிழ்கிறார்கள் பல்கேரியா நட்சத்திரங்கள்.