’82 வயசு’ நடிகையை அக்கான்னு தான் கூப்பிடணுமாம்..!
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் ‘என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா..?’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்.
டேக் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் “ ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி கேரக்டரில் நடிக்கிறார். பகல், இரவு எதையும் பார்க்காமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருக்கும் இந்த 82 வயசுப் பாட்டியை பாட்டி என்று கூப்பிட்டால் பிடிக்கவே பிடிக்காதாம். ‘‘அக்கா’னு கூப்பிடுங்க’ என்பாராம்.
சரி படம் எப்படி? கேட்டதும் சொன்னார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா. ‘நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின் பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்லக் கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.