சிம்புவுக்கு ஏன் இந்த வம்பு? : ஆரம்பமாகுது அடுத்த பஞ்சாயத்து

Get real time updates directly on you device, subscribe now.

ந்த வாழ்வும், வளமும் உன்னால் வந்தது என்கிற வரிகள் எல்லாம் சிம்புவின் வாழ்க்கை சரித்திரத்தில் இருக்காது போலும்.

இந்த வம்பும், பஞ்சாயத்தும் உன்னால் தான் என்கிற வரிகள் தான் அவருடைய படங்களின் கீழே கொடுக்கப்படும் சப் டைட்டிலாகி விடுகிறது.

சிம்புவின் சமீபகால படங்கள் எல்லாமே எறும்பு சைஸ் பஞ்சாயத்தாவது இல்லாமல் ரிலீஸ் ஆனதாக வரலாறுகள் இல்லை.

இதுவரை வந்த பஞ்சாயத்துகள் எல்லாமே ரிலீஸ் நேரம் நெருங்க நெருங்க நெருக்கடி கொடுத்தவை.

ஆனால் இப்போது வரப்போகும் பஞ்சாயத்து படத்தின் பர்ஸ்ட் லுக் ரீஸரிலேயே ஆரம்பித்து விடும் போலிருக்கிறது என்பது ஓ மை காட் ரகம்!

Related Posts
1 of 33

ஏற்கனவே பீப் பாடல் விவகாரத்தில் ஏற்பட்ட தலைவலியே இன்றுவரை சிம்புவுக்கு அகன்றபாடில்லை. அதற்குள் அவர் நடிப்பில் தயாராகி வரும் ”அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ” படத்தின் பர்ஸ்ட் லுக் பஞ்சாயத்து ஆகிற நிலைக்கு வந்திருக்கிறது.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதில் மாதர் சங்கங்களுக்கு பெரும் பங்குண்டு. அவர்களின் தெருவுக்கு வந்த தொடர் போராட்டம் தான் பீப் சாங் விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டது.

அவர்களின் இந்தச் செயல்பாடு சிம்புவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்ததோடு சில வாரங்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கும் கொண்டு சென்றது.

இதை மனதில் வைத்துக் கொண்டிருந்த சிம்பு மாதர் சங்கங்களை போட்டுத் தாக்கும் விதமாக ”பீப் பாடலுக்கு மட்டும் தான் தெருவுல இறங்கி போராட வருவீங்களா? மத்ததுக்கெல்லாம் சைலண்ட்டா போயிடுவீங்களா?” என்கிற ரீதியிலான கேள்விகளை பஞ்ச் டயலாக்குகளாகப் பேசி பீதியைக் கிளப்பப் போகிறாராம்.

பஞ்சாயத்தும், பிரச்சனைகளும் கூடவே பொறந்ததா சிம்பு?