அனிருத்துக்கு திருமணம்? : பெண் பார்க்கிறார் ரஜினி!
உலகம் முழுக்க தனது இளமை ததும்பும் இசையால் நல்ல புகழோடு இருக்கிறார் அனிருத்.
ஆனால் உள்ளூரிலோ அவருடைய பெயர் அநியாயத்துக்கு நாறிக்கிடக்கிறது.
ஆண்ட்ரியாவுடன் லிப் லாக், சிம்புவுடன் சேர்ந்து போட்ட பீப் சாங், அதன்பிறகு வெளியான ஒரு ஆபாச வீடியோ, சுசி லீக்ஸ் சமாச்சாரத்திலும் முக்கியஸ்தர் என அனிருத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்யும் விதத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளியாவதால் அவரது குடும்பத்தினர் பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
என்ன தான் உலகளவில் பெயர், புகழ் கிடைத்தாலும் உள்ளூர் மக்கள் மத்தியில் இமேஜ் என்பது முக்கியம் அல்லவா?
இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவிலும் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, அஜித்தின் ‘வேகம்’ என தமிழில் பிஸியாகத்தான் இருக்கிறார்.
இந்த பாஸிட்டீவ்வான சூழலைப் பயன்படுத்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் குடும்பத்தினர்.
அவருக்கான இந்தப் பெண் பார்க்கும் படலத்தில் ரஜினியும் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் கூடுதல் செய்தி.
குறிப்பாக ரஜினியின் ஆலோசனை இந்த விவகாரத்தில் முக்கியம் என்பதால் அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா ரஜினியின் ஆலோசனையோடு மட்டுமல்லாமல், அவரின் மேற்பார்வையிலேயே அனிருத்துக்கு பொருத்தமான பெண்ணைத் தேடும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்.
அனேகமாக இன்னும் ஒரு வருடத்துக்குள் அனிருத் புது மாப்பிள்ளை ஆகி விடுவார் என்பது மட்டும் உறுதி.