காதல் இல்லை… வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை டிக் செய்கிறார் அனுஷ்கா!

Get real time updates directly on you device, subscribe now.

anushka

36 வயதான பிறகும் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா..?

தினமும் அனுஷ்காவை அவரது பெற்றோர்கள் நச்சரிக்கத் தொடங்கி விட்டார்களாம். எல்லாம் கல்யாண விஷயமாகத்தான்.

நாகர்ஜுனா, ஆர்யா, நாக சைதன்யா என நடித்த பல ஹீரோக்களில் ஒரு சில ஹீரோக்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் தான் அனுஷ்கா.

Related Posts
1 of 7

அப்படி வந்த எல்லா செய்திகளையும் மறுத்த அனுஷ்கா என் திருமணம் உங்களுக்கு தெரியாமல் கண்டிப்பாக நடக்காது என்று அவ்வப்போது மீடியாக்களிடம் சொல்லுவார்.

சமீபகாலமாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளரை அனுஷ்கா காதலிக்கிறார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூட ஆந்திரா ஊடகங்கள் வழக்கம் போல கொளுத்திப் போட்டன.

அந்த வெடியும் பூஸ்வானமாகி விட்டதாம். ஆமாம், அனுஷ்கா இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அதே சமயம் வயது ஏறிக்கொண்டே போகிறது அவரது பெற்றோர்கள் கவலை அடைந்திருப்பதால் அம்மா – அப்பா பார்க்கிற மாப்பிள்ளையே திருமணம் செய்ய சம்மதித்து விட்டார்.

பல முறை கேட்டும் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்த மகள் திடீரென்று சம்மதம் சொல்லவும் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தடபுடலாக ஆரம்பித்திருக்கிறார் அனுஷ்காவின் தாய்க்குலம். விரைவிலேயே நல்ல செய்தி ரசிகர்களுக்கு வந்து சேரும்.