நானும் மகனும் சேர்ந்து நடிக்கிறோம்… ஜெயம் ரவி மகிழ்ச்சி!

Get real time updates directly on you device, subscribe now.

jayam-ravi

வாரிசுகளை இளவட்ட ஹீரோக்களாக அறிமுகப்படுத்தும் நடிகர்களை விட இப்போது குழந்தையாக வளரும் போதே நடிப்பில் இறக்கி விட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இளைய தளபதி விஜய் தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் அறிமுகப்படுத்தி பரபரப்பை கிளப்பினார்.

இப்போது அவரைப் போலவே தான் நடித்து வரும் டிக் டிக் டிக் படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்துகிறார் ஜெயம் ரவி.

Related Posts
1 of 12

சக்தி ராஜன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இப்படத்தில் தான் தனது மகனை நடிகராக அறிமுகப்படுத்துகிறார் ஜெயம் ரவி.

இதுகுறித்து ”என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள்! நானும் என் மகன் ஆரவும் சேர்ந்து ”டிக் டிக் டிக்” படத்தில் நடிக்கிறோம்!!! கடவுள் அவனை ஆசீர்வதிக்கட்டும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி!