கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? : 2017 ஏப்ரல் 14 -ல் தெரிஞ்சிடும்!

Get real time updates directly on you device, subscribe now.

Prabhas

ந்தக் கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 2015ம் ஆம் ஆண்டு ரிலீசான ‘பாகுபலி’ படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை புரிந்தது.

உலகம் முழுவதும் சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்த இந்தப் படத்துக்கு தென்னிந்திய அளவில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற பெருமைம் உண்டு.

Related Posts
1 of 8

முன்னதாக இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஹீரோ பிரபாஸ் ”பாகுபலியின் இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு வரும்” என்று சொல்லியிருந்தார். ஆனால் அதன் பிறகான காட்சிகள் மாறிப்போக படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப்போனது.

நேற்றுவரை பாகுபலி 2 எப்போது ரிலீசாகும் என்கிற உறுதியான தகவலே தெரியாமல் இருந்த ரசிகர்கள் இன்று படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் 14ம் ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த தேதியில் பதில் கிடைத்து விடும்.