devil’s Double Next Level- விமர்சனம்

அதே மாவு, அதே பழைய தோசை
படங்களைச் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்துவரும் சந்தானத்திற்கு, ஒரு நபரிடமிருந்து படம் பார்த்துப் புரமோஷன் செய்யச் சொல்லி ஒரு அழைப்பு வருகிறது. சந்தானம் தன் பேமிலியோடு அங்கு செல்கிறார். ஆனால் அந்தத் தியேட்டர் பேயாக இருக்கும் செல்வராகவனால் இயங்குகிறது. செல்வராகவன் சந்தானம் டீமை தியேட்டரில் ஓடும் படத்திற்குள் ட்ராப் செய்துவிடுகிறார். அந்தப் படத்திற்குள் இவர்கள் சென்று படும்பாடு தான் கதை
முதல் முறையாக டிடி சீக்வென்ஸில் சந்தானம் காமெடிக்குச் சிரிக்க முடியாமல் போனது இந்தக் படத்திற்குத் தான். கிங்ஸ்ட்லி காமெடியும் சென்ற படம் அளவிற்கு எடுபடவில்லை. கெளதம் மேனென் சீரியஸ் ரோலில் காமெடி செய்ய முயற்சித்துள்ளார். கஸ்தூரி கூடுமானவரை நம் வெறுப்பைச் சம்பாதிக்கிறார். நிழல்கள் ரவி டாய்லெட் காமெடியால் நம்மை கோபசொல்லவிடாமல்ிறார். கீதிகா திவாரி யாசிகா, மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்பட பலரும் படத்தில் இருக்கின்றனர்
OfRo இசையில் பெரிய எனர்ஜி ஒன்றுமில்லை. கோவிந்தா பாடலுக்கும் பவன் கல்யாண் கோவிந்தா போட்டுவிட்டதால் பாடல்களும் படுத்துவிட்டது. ஒளிப்பதிவாளர் தனது வேலையை ஓரளவு சிறப்பாகச் செய்துள்ளார்
படத்தில் திரைக்கதை என்பதை மறந்து பேசித் தள்ளுகிறார்கள். எந்தப் பேச்சும் ஈர்க்கவில்லை. மொட்டை ராஜேந்திரனின் எலிக்காமெடி தவிர வேறு எந்த ஐடியாவும் வொர்க் ஆகவில்லை. இந்த நெக்ஸ்ட் லெவல் வேறலெவல் எனச் சொல்லவிடாமல் நம்மை தடுக்கிறது
ரிவ்யூவர்ஸை ரிவஞ்ச் எடுக்கிறேன்னு ரிவ்யூவர்ஸுக்கு கன்டென்ட் கொடுத்துள்ளனர்
2/5