ஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்!

Get real time updates directly on you device, subscribe now.

ரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏன் இந்த மாற்றம் என்பது பற்றி இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. ஆனால் நடிகை ரியாவுக்கு அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.

Related Posts
1 of 134

திகங்கனாவின் சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் ட்ரெய்லரை பார்த்தேன். அவருடைய நடிப்பு பிடித்துப் போய் உடனே தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.

இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக தயாராகி வருகிறது இந்தப்படம்.