Family Boy movie teaser update

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.