நயன்தாராவின் பலநாள் ஆசை? : பொறுப்பாக நிறைவேற்றினார் விக்னேஷ் சிவன்!

Get real time updates directly on you device, subscribe now.

nayan1யன்தாரா சினிமாவுக்குள் நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது.

இந்த பத்து ஆண்டுகளில் ‘சூப்பர் ஸ்டார்’ முதல் ‘சுப்ரீம் ஸ்டார்’ வரை பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு விட்டார்.

இடையில் ‘இது கதிர்வேலன் காதல்’ உட்பட சில தோல்விப் படங்களை கொடுத்தாலும் சமீபத்தில் ரிலீசான ‘தனி ஒருவன்’, ‘மாயா’ இரண்டு படங்களும் நயன்தாராவின் கேரியர்  சேதாரத்தை சரி செய்திருக்கின்றன.

இத்தனை வருடங்களில் எத்தனையோ ஹிட்டுகள் கொடுத்திருந்தாலும் நயன்தாராவுக்கு எல்லாப் படங்களிலும் வந்தது என்னவோ இரவல் குரல் தான். தான் நடிக்கும் படங்களில் இதுவரை சொந்தக்குரலில் பேசியதே இல்லை நயன்.

தமிழில் நடிக்க வரும் போதே தமிழ் சரளமாக வரும் என்றாலும் பல இயக்குநர்கள் பயந்து ஒதுங்கி விட்டனர், இதனால் ஒரு படத்திலாவது சொந்தக் குரலில் பேச வேண்டும் என்கிற அவரின் ஆசை நிறைவேறாமலேயே இருந்தது.

Related Posts
1 of 39

தற்போது நயனின் சொந்தக்குரலில் பேசும் ஆசையை ‘நானும் ரெளடி தான்’ படத்தில் சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஆமாம், இதில் நயன்தாரா சொந்தக்குரலில் பேசியிருக்கிறாராம்.

மேலும் வாய்ஸ் ரசிகர்களிடம் போய்ச்சேர வேண்டும் என்றே நேற்று ரிலீசான ‘நானும் ரெளடி தான்’ படத்தின் டீஸரில் நயன்தாரா வசனம் பேசும் ஒரு காட்சியையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

பொறுப்பான லவ்வரா இருக்காரே..?