கைவசம் ஒண்ணே ஒண்ணு! : கவலையில் ஹன்ஷிகா

இவ்வளவு சீக்கிரம் தனது மார்க்கெட் சரியத் தொடங்கும் என்று ஹன்ஷிகாவே எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் அந்த கொழுக் மொழுக் நாயகி கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக வருஷத்துக்கு அரை டஜன் படங்களில் கமிட்டாகி கல்லா கட்டி வந்த ஹன்ஷிகாவுக்கு இப்போது கை வசம் ஜெயம் ரவியுடன் போகன் படம் மட்டும் தான் இருக்கிறது.
அதன்பிறகு இதுவரை எந்தப் புதுப்படமும் கமிட்டாகவில்லை.
ஹன்ஷிகாவும் வாய்ப்பு வரும் வரும் என்று எதிர்பார்த்து வெறுத்துப் போனவர் இப்போது தானே தனக்குத் தெரிந்த இயக்குநர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறார்.
நயன் தாரா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்திருப்பதால் தனக்கும் அப்படி ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கிறாராம்.
உஷாரான இயக்குநர்களோ ஹன்ஷிகாவின் மார்க்கெட் சரியில்லாத காரணத்தால் அவரது பேச்சுக்கு பிடி கொடுக்காமல் ஒதுங்கி விடுகின்றனர்.
இதனால் என்ன செய்வதென்று பரிதவித்த ஹன்ஷிகா தனது சம்பளத்தில் சில லகரங்களை குறைத்திருக்கிறார்.