தனுஷ் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!
‘கயல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.
மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தில் எக்ஸ் மேன், ஷங்கய் நூண், பேட்மேன் பிகின்ஸ், ஜேம்ஸ் பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலக புகழ் பெற்ற படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிந்த ரோஜர் யுவான் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக்காட்சிகளுக்கு பணிபுரிகிறார்.
அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கம்ர்சியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ், கலை இயக்குனர் – வைரபாலன், நிர்வாக தயாரிப்பு – ராகுல். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.